சர்க்காரின் அடுத்த சாதனை! இதுவரை தமிழ் சினிமா கண்டிராத புதிய சாதனை
a new record of sarkar releasing in most countries

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் படம் சர்க்கார். இப்படம் அரசியல் பின்னணியை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
சர்க்கார் படத்தை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். சர்ச்சைகள் இருந்தாலும் வரும் தீபாவளிக்கு படம் வெளியாவது உறுதியாகிவிட்டது.
சமீபத்தில் வெளியான சர்க்காரின் டீசர் ரசிகர்கள் மனதில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே பல்வேறு சாதனைகளை முறியடித்தது. விஜயின் சர்க்கார் திரைப்படம் அரசியல் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளதால் விஜய் அரசியலில் களமிறங்குவதற்கு இது சரியான நேரமாக இருக்கும் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
படம் வெளியாகும் முன்பே பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது சர்க்கார். அந்த வகையில் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத புதிய ஒரு சாதனையை சர்க்கார் திரைப்படம் படைத்துள்ளதாக படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த சாதனை என்னவெனில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு திரைப்படம் ஒரே நேரத்தில் உலகின் 5 கண்டங்களை சேர்ந்த 80 நாடுகளில் 1200 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுவது தான். இந்த சாதனையை சர்க்கார் இப்பொழுது நிறைவேற்றியுள்ளது.