பயங்கர மாடர்னாக மாறிய 96 பட குட்டி ஜானு! லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!
96 movie kutti jaanu modern look photo

விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது. பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவான இந்த திரைப்படத்தை ஒரு காதல் காவியமாக அனைவரும் கொண்டாடினார்கள்.
96 படத்தில் பள்ளிப்பருவ விஜய் சேதுபதியாக பிரபல குணசித்ர நடிகர் MS பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரன் நடித்திருந்தார். அதேபோல பள்ளி பருவ திருஷாவாக கெளரி கிஷான் என்ற பெண் நடித்திருந்தார். விஜய் சேதுபதி, த்ரிஷா அளவிற்கு இவர்களது நடிப்பும் பேசப்பட்டது.
இவர்கள் இருவரும் உண்மைலயே காதலிப்பதாக கூட பேசப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என இருவரும் மறுத்தனர். படத்தில் ஜானுவாக நடித்த கெளரி கிஷான் புதிய மலையாள திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் 96 படத்தில் சின்ன பெண்ணாக, பள்ளி சீருடையில் நடித்திருந்த ஜானுவின் தற்போதைய லேட்டஸ்ட் மாடர்ன் லுக் புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.