×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனான விஜய் சேதுபதி! வெளியானது 800 பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்!

விஜய் சேதுபதி நடிக்கும் 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை  வரலாறு படமாக உருவாகி வருகிறது. இதில்  முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். முரளிதரன் 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  அதனால் இப்படத்திற்கு 800 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

800 படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி  இயக்கியுள்ளார். தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்  நேற்று வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதனை தொடர்ந்து கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதால் 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று  சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் முன் வெளியிடப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Muthaiah muralitharan #vijay sethupathi #800
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story