×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்ட் என்ட்ரி கொடுக்கும் 5 பிரபலங்கள்.! அட.. இவங்கெல்லாமா!! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்ட் என்ட்ரி கொடுக்கும் 5 பிரபலங்கள்.! அட.. இவங்கெல்லாமா!! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தனிரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இந்த சீசனில் யுகேந்திரன், கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, அனன்யா, வினுஷா, பாவா செல்லதுரை, மணிசந்திரா, நிக்சன், சரவண விக்ரம், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி,ரவீனா, விஷ்ணு, விசித்திரா, அக்ஷயா உதயகுமார், விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் முதல் வாரத்தில் அனன்யா குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனார். அவரைத் தொடர்ந்து பாவா செல்லதுரை தன்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது எனக் கூறி தானாக வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் கடந்த வாரம் விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆனார்.

வித்தியாசமான டாஸ்க்குகளுடன் அனல் பறக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் தற்போது மேலும் ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அதாவது, விஜே.அர்ச்சனா, சூப்பர் சிங்கர் மானசி, சாம் சாமுவேல்ஸ், Kpy பாலா,ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையபோவதாக  கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #Season 7 #Wild card
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story