×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

27 வருட சினிமா சாம்ராஜ்யம்! இணையத்தை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!

27 Years of kw Emperor VIJAY

Advertisement

இந்திய அளவில் பிரபலமான தமிழ் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். பிகில் படத்தின் வெற்றியை அடுத்து தற்போது மாநகரம், கைதி படங்களை கொடுத்த வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்துவருகிறார் விஜய்.

 இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் தளபதியின் இந்த வெற்றி ஒரே நாளிலோ அல்லது ஒரே படத்திலோ கிடைத்தது அல்ல. பல்வேறு வெற்றிப்படங்கள், தோல்வி படங்களை கடந்து இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார் தளபதி விஜய்.

டிசம்பர் 4 இன்று, இதே நாளில் 27 வருடத்திற்கு முன்பு வெற்றி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் தளபதி விஜய். இந்நிலையில் விஜய் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 27 வருடங்கள் ஆகிறது.

இந்த சிறப்பான நாளை தளபதி ரசிகர்கள் பலவிதங்களில் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். அதில் #27YrsOfKwEmperorVIJAY என்ற ஹாஸ்டாக் மூலம் ட்விட்டரில் இதை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #27YrsOfKwEmperorVIJAY
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story