×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகை யார் தெரியுமா?

2018 best actor in tamil movie heroenis

Advertisement

2018ம் ஆண்டின் சிறந்த நடிகை யார் என்பது குறித்து, பிரபல நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் நயன்தாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் இவ்வாண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் தற்சமயம் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் பிரபல நிறுவனம் இவ்வாண்டில் மக்கள் மனதில் இடம்பிடித்த சிறந்த நடிகைகள் குறித்த விபரம் வெளியிட்டுள்ளது.

2018ம் ஆண்டின் சிறந்த நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 44.59 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். அடுத்ததாக இரண்டாவது இடத்தில் நடிகை த்ரிஷா உள்ளார். 

மூன்றாவதாக கீர்த்தி சுரேஷ் தேர்வாகியுள்ளார். இவரது நடிப்பில் நடிகையர் திலகம், தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகியது.

4வது இடம் நடிகை சமந்தா, 5வது இடம் சாய் பல்லவி, 6வது இடம் ப்ரியா பவானி சங்கர், 7வது இடம் சயீஷா, 8வது இடம் எமி ஜாக்சன், 9வது இடம் காஜல் அகர்வால், 10வது இடம் ராஷி கன்னாவுக்கும் கிடைத்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthara #keerthi Suresh #thrisha
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story