×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டிசம்பர் 15 அன்று வெளியாகவுள்ள தமிழ் படங்கள்: விபரம் இதோ.!

டிசம்பர் 15 அன்று வெளியாகவுள்ள தமிழ் படங்கள்: விபரம் இதோ.!

Advertisement

 

2023ம் ஆண்டின் இறுதிக்கட்டத்தை நோக்கி உலகமே நகர்ந்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையும் தனது தீவிரத்தை உச்சத்தை நோக்கி நகருகிறது. எவை எப்படி இருப்பினும், மக்களுக்கு வார இறுதியில் தொடக்கத்திற்கு முன் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் பல படங்கள் ரிலீசாகின்றன. 

அந்த வகையில், நடப்பு வாரத்தில் 15ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்து இன்று காணலாம்.  

1. ஆலம்பனா: பார்வதி நாயர், வைபவ் ரெட்டி, யோகிபாபு, காளி வெங்கட், தீனா, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், பாண்டியராஜன் உட்பட பலரின் நடிப்பில், பாரி கே.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. இப்படம் டிச.15 அன்று திரைக்கு வருகிறது.

2. பைட் க்ளப்: உறியடி புகழ் விஜயகுமார், மோனிஷா மோகன், அவினாஷ் ரகுதேவன், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், சரவண வேல் உட்பட பலரின் நடிப்பில் திரைக்கு டிசம்பர் 15 அன்று வரவுள்ள திரைப்படம் பைட் க்ளப். இப்படத்தை லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் முதல் திரைப்படமாக தயாரித்து வழங்குகிறது.

3. கண்ணகி: பெண்களின் வாழ்வியலை மையப்படுத்தி அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப் மற்றும் ஷாலின் ஜோயா உட்பட பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் கண்ணகி. இப்படம் சமூக கருத்துக்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. படம் டிசம்பர் 15  அன்று வெளியாகிறது. படத்தை யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ளார்.

4. சபாநாயகன்: சி.எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன், கார்த்திகா முரளீதரன், மேகா ஆகாஷ், சாந்தினி சௌத்ரி, மறைந்த நடிகர் மயில்சாமி உட்பட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படமான சபாநாயகன், டிச.15 அன்று வெளியாகிறது. இப்படம் அசோக் செல்வனின் காதல்-காமெடி-பாசப்பிணைப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

இவை தவிர்த்து டி.எஸ் ராஜ்குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள அகோரி, ராஜா தேசிங்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்ரீ சபரி ஐயப்பன் ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகின்றன.   

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Next Weerk Release Movies #Tamil Movies New Release
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story