×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உல்லாசமாக ஆணுடன் 3 நாட்கள் ஹோட்டலில்! பெண்ணிடம் அத்துமீறி நண்பர்களிடம் வீடியோ காலில் ! போதையில் ஓடி ஒளிந்த இளம்பெண்! பகீர் சம்பவத்தின் பின்னணி...

உல்லாசமாக ஆணுடன் 3 நாட்கள் ஹோட்டலில்! பெண்ணடம் அத்துமீறி வீடியோ காலில் நண்பர்களிடம் காட்டி! போதையில் ஓடி ஒளிந்த இளம்பெண்! பகீர் சம்பவத்தின் பின்னணி...

Advertisement

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண், சென்னையின் மேற்கு தாம்பரம் பகுதியில் தங்கி, ராஜீவ் காந்தி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

மதுபான விடுதியில் ஏற்பட்ட பழக்கம்

அந்த இளம்பெண் ஒரு நட்சத்திர ஹோட்டலின் பார் பகுதியில் சென்றபோது, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஷாகின் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த அறிமுகம் சில நாட்களில் நெருக்கமாகி, இருவரும் பலமுறை சந்தித்து பழகினர்.

திருவான்மியூரில் மூன்று நாட்கள் தங்கிய இருவர்

சமீபத்தில் இருவரும் திருவான்மியூர் சிக்னல் அருகே உள்ள தனியார் விடுதியில் மூன்று நாட்கள் அறை எடுத்து தங்கியுள்ளனர். இதற்குள் இருவரும் மது அருந்தியதுடன், அந்த இளைஞர் ஷாகின், இளம்பெணை பாலியல் பலாத்காரம் செய்தார் என கூறப்படுகிறது. மேலும் அந்த செயல்களை வீடியோ காலில் தனது நண்பர்களிடம் பகிர முயற்சி செய்தார்.

இதையும் படிங்க: அதிரடியாக குறைந்த தங்கம் விலை! மகிழ்ச்சியில் மக்கள்! ஒரு சவரன் எவ்வளவு? இன்றைய தங்கம் விலை நிலவரம்..

சமயத்தில் நுட்பமாக தப்பிய இளம்பெண்

இது குறித்து அதிர்ச்சி அடைந்த பெண், விடுதியில் உள்ள கழிப்பறைக்கு ஓடி சென்று பதுங்கினார். அங்கு இருந்தபடியே தனது செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் வழங்கினார்.

கைது செய்யப்பட்ட ஷாகின் மீது வழக்கு பதிவு

தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த இளம்பெணை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் அவரது புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஷாகின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

 

 

 

இதையும் படிங்க: போலீஸ்காரரை 1 கி.மீ தூரம் காரில் இழுத்துச் சென்ற பிரபல ரவுடி! சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்! சென்னையில் பரபரப்பு..

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#திருநெல்வேலி இளம்பெண் #Chennai girl assault #தனியார் விடுதி சம்பவம் #sexual assault case #Tamil Nadu crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story