வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!. மக்கள் பேரதிர்ச்சி!.
வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!. மக்கள் பேரதிர்ச்சி!.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்துள்ளதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து குறையாமல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.99 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.80 ஆகவும் விற்கப்படுகிறது.