தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கவலையில் நகைப்பிரியர்கள்... இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை! முழு விபரம் உள்ளே....

கவலையில் நகைப்பிரியர்கள்... இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை! முழு விபரம் உள்ளே....

may8--gold-price-hike-shocks-public-2025 Advertisement

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏறிக்கொண்டே வருகின்றது. சில நேரங்களில் விலை சற்று குறைந்தாலும், மீண்டும் அதிவேகமாக உயர்ந்து வருவது பாமர மக்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.9,025 என்றும், ஒரு சவரன் ரூ.72,200 என்றும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று, தங்கத்தின் விலை மேலும் ரூ.50 அதிகரித்து கிராமுக்கு ரூ.9,075 ஆகவும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.72,600 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு, கடந்த வருடங்களில் 60 ஆயிரத்துக்கும் குறைவாக விற்கப்பட்ட தங்கத்தை நினைவுகூரும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. விலைகள் தொடர்ந்தும் உயரும் எனும் அச்சத்தோடு, இனி குறைவதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

இதையும் படிங்க: அதிர்ச்சியில் மக்கள்! உச்சம் தொட்ட தங்கத்தின் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா?

இதேபோன்று வெள்ளியின் விலையும் உயர்வை சந்தித்துள்ளது. தற்போது வெள்ளி கிராமுக்கு ரூ.111 ஆகவும், ஒரு கிலோவிற்கு ரூ.1,11,000 ஆகவும் விற்கப்படுகிறது.

 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#gold rat may8 #increased
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story