×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவன்-மனைவியாக முதலீடு செய்ய ஆசையா? மாதம் ரூ.8,633 வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்.. முழு விபரம்.!

Post Office Schemes Husband Wife: தபால் நிலைய வங்கியின் சேமிப்புக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டி கிடைக்கும்.

Advertisement

நிலையான வட்டி, நம்பிக்கை மீது ஆர்வம் கொண்ட தம்பதிகள் போஸ்ட் ஆபிசில் இருக்கும் கீழ்காணும் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யலாம்.

வருமானம்:

மத்திய அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவரது திட்டங்கள் அரசு வங்கிகள், தபால் நிலைய வங்கிகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாதம் நிலையான வருமான தரும் MIS திட்டம் தபால் நிலையத்தில் இருக்கிறது. இந்த திட்டத்தில் கணவன் - மனைவியாக முதலீடு செய்வதன் வாயிலாக மாதம் ரூ.8,633 நிலையான வருமானம் கிடைக்கும்.

இதையும் படிங்க: ரூ.9,000 வரை மாத வட்டி.. அரசின் சூப்பர் முதலீட்டு திட்டம்.. முழு விபரம்.!

கணவன்-மனைவிக்கு ஏற்றது:

இந்த திட்டத்துக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் அரசு சுமார் 7.4% வட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பட்சத்தில், கணக்கு தொடங்கப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் நிலையான வட்டித்தொகையை பெறலாம். இது நேரடியாக சேமிப்புக்கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்சம் ரூ.1000 கொண்டு கணக்கை திறக்கலாம். அதிகம் சம்பாதிக்க விருப்பம் இருப்பின், அதிக தொகை முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக இணைப்புக்கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும், தனிநபர் ரூ.9 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம்.

முதலீடு செய்யலாம்:

சுமார் ரூ.14 லட்சம் தம்பதிகள் முதலீடு செய்தால், 7.4% வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.8,633 பணம் கிடைக்கும். சுமார் 5 ஆண்டுகளுக்கு இது நிலையான வருமானமாக இருக்கும். திட்டத்தின் காலம் நிறைவு பெற்றதும், முழு தொகையும் திரும்ப வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைய தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும். பின் கணவன்-மனைவியாக முதலீடு செய்யலாம் அல்லது தனிநபராகவும் முதலீடு செய்து நிலையான மாத வருமானத்தை பெறலாம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Trending #Post Office Schemes #Couple Goals List #முதலீடு #போஸ்ட் ஆபிஸ் பேங்க்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story