நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! சரசரவென குறைந்த தங்கம் விலை! 3 நாளில் சவரனுக்கு இவ்வளவு குறைவா! தங்கம் வாங்க சரியான நேரம்...
சென்னையில் கடந்த சில நாள்களாக தங்கம் விலை குறைந்த நிலையில், ஜூலை 26 அன்று ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்தது பெரும் கவனம் பெற்றது.
சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த தொடர்ச்சியில், இன்று (ஜூலை 26) விலை மேலும் அதிரடியாக குறைந்துள்ளது.
இன்றைய நிலையில், 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.400 வரை குறைந்துள்ளது. இதன் மூலம் 1 கிராம் தங்கம் ரூ.9,160 ஆகவும், ஒரு சவரன் ரூ.73,280 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
இந்த வாரம் தொடங்கும்போது தங்க விலை உயர்வு காணப்பட்டது. ஆனால், கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.1,700 வரை குறைவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நகை பிரியர்களே கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம்!
தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் பொதுமக்கள் இந்த விலை குறைவை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: உச்சகட்ட அதிர்ச்சி! ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா! இன்றைய தங்கம் விலை நிலவரம்...