×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரிலையன்ஸ் ஜியோவின் பங்குகளை வாங்கிய பேஸ்புக் - 43,574 கோடி முதலீடு!

Facebook buys 9.9% shares of jio

Advertisement

இந்தியாவின் முதன்மை டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் 9.9% பங்குகளை அமெரிக்காவின் பேஸ்புக் நிறுவனம் 43,574 கோடிக்கு வாங்கியுள்ளது.

உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பிரபலமான வாட்ஸ்-ஆப் நிறுவனத்தை வாங்கியது. இந்தியாவில் மட்டும் 40 கோடி வாட்ஸ்-ஆப் பயனாளர்கள் உள்ளனர்.

தற்போது பேஸ்புக் நிறுவனம் இந்தியாவின் முதன்மை டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் 9.9% பங்குகளை 43,574 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இந்த தகவலினை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் முதன்மை இயக்குனர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் இந்த ஒருங்கிணைப்பால் இந்தியாவில் வாட்ஸ்-ஆப் மூலம் பல சிறுதொழில்கள் உருவாக்கப்படும் எனவும் கணிக்கப்படுகிறது. மேலும் ஜியோ மற்றும் வாட்ஸ்-ஆப்பினை இணைந்து உபயோகிக்கும் பயனாளர்களுக்கு புதிய சலுகைகள் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Facebook #Reliance Jio #Facebook and jio
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story