அதிர்ச்சியில் நிலைக்குலையும் மக்கள்! இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3600 உயர்வு! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ....!
சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை திடீர் உயர்வு. 22, 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.3,600 வரை அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னையில் நகை வாங்குவோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் இன்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் திடீரென உயர்ந்துள்ளன. நேற்று ஏற்பட்ட சிறிய சரிவுக்கு பின்னர், இன்று ஒரே நாளில் ஏற்பட்ட இந்த உயர்வு சந்தையில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
22 கேரட் ஆபரண தங்கம் விலை
நேற்று சவரனுக்கு ரூ.1,760 வரை குறைந்திருந்த நிலையில், இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,600 வரை உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 22 கேரட் தங்கம் ரூ.1,17,200க்கும், ஒரு கிராம் ரூ.14,650க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: தங்கம் விலை மீண்டும் உயர்வு! சவரனுக்கு ரூ. 640 அதிகரித்தது..... இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ!
24 கேரட் தூய தங்கம் நிலவரம்
இதனுடன், 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.15,982க்கும், ஒரு சவரன் ரூ.1,27,856க்கும் விற்பனை செய்யப்படுவதால், 24 கேரட் தங்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வெள்ளி விலை உயர்வு
தங்கம் மட்டுமல்லாது வெள்ளி விலையும் இன்று உயர்வை பதிவு செய்துள்ளது. கிராமுக்கு ரூ.20 வரை அதிகரித்து, ஒரு கிராம் ரூ.360க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம், நாணய மாற்று விகிதம் மற்றும் முதலீட்டு தேவை போன்ற காரணிகள் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் மாற்றம் காணலாம் என்பதால், சந்தை நிலவரத்தை கவனமாக கண்காணிக்க வேண்டும் என வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை! இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1760 உயர்வு! இன்றைய விலை நிலவரம் இதோ....