தங்கம் விலை தாறுமாறாக உயர்வு! ஒரே நாளில் ரூ.1,840 அதிகரிப்பு! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் அதிரடியாக உயர்வு. 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,650-க்கு விற்பனை.
சர்வதேச சந்தை அதிர்வுகளின் தாக்கம் காரணமாக, சென்னையில் இன்று தங்கம் விலை மற்றும் வெள்ளி விலை மீண்டும் கணிசமான உயர்வை கண்டுள்ளது. தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்படும் இந்த நிலை, நகை வாங்க திட்டமிட்டவர்களை கவலையடையச் செய்துள்ளது.
தங்கம் விலை உயர்வு
சர்வதேச சந்தை நிலவரங்களைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக மாற்றம் கண்ட ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று (பிப். 9) சென்னையில் மீண்டும் அதிகரித்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,650-க்கும், ஒரு சவரன் ரூ.1,840 உயர்ந்து ரூ.1,17,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடி
தங்கத்தின் விலையைப் பின்பற்றி வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.300-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.15,000 உயர்ந்து ரூ.3,00,000-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை! நகைக்கு டஃப் கொடுக்கும் வெள்ளி விலை! ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா!
அண்மைக் காலமாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ச்சியான மாற்றங்கள் நிலவுவதால், நகை வாங்க நினைக்கும் பொதுமக்கள் எப்போது வாங்குவது என்ற குழப்பத்தில் உள்ளனர். சந்தை நிலவரங்களை கவனித்து வாங்க வேண்டும் என வியாபாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: தங்கம் விலை மீண்டும் உயர்வு! சவரனுக்கு ரூ. 640 அதிகரித்தது..... இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ!