மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1320 சரிவு..! வெள்ளி விலையும் குறைவு!
சென்னையில் இன்று ஆபரண தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்தது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.1,320 வரை சரிவு; முதலீட்டாளர்கள் கவனம்.
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் இன்று நிம்மதி தரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய அதிரடி உயர்வுக்குப் பிறகு, இன்று விலைகள் கணிசமாக குறைந்துள்ளதால் பொதுமக்களும் முதலீட்டாளர்களும் சற்றே நிம்மதியடைந்துள்ளனர்.
22 கேரட் தங்க விலை சரிவு
நேற்று ஒரே நாளில் இருமுறை உயர்ந்து ஒரு லட்சத்தைத் தாண்டிய ஆபரண தங்கம் விலை, இன்று குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.1,320 வரை குறைந்து, ஒரு சவரன் ரூ.98,800-க்கும், ஒரு கிராம் ரூ.12,350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தூய தங்கத்தின் நிலை
இதன் தொடர்ச்சியாக, 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் சரிவடைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.13,473-க்கும், ஒரு சவரன் ரூ.1,07,952-க்கும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தை மாற்றங்களும், உள்ளூர் தேவையின் தாக்கமும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: குட் நியூஸ்! ஒரே நாளில் ரூ.880 க்கு குறைந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ....
வெள்ளி விலையிலும் குறைவு
தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையிலும் இன்றைய தினம் சரிவு காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.4 குறைந்து ரூ.211-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி சந்தை, வரும் நாட்களில் எவ்வாறு நகரும் என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. தற்போதைய விலை சரிவு நகை வாங்க திட்டமிடுபவர்களுக்கு ஓரளவு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.