அம்மா கையால் சாப்பிடும் முத்து! தந்தையிடம் கூறி முத்து கண்கலங்கும் உணர்ச்சி தருணமான காட்சி! சிறக்கடிக்க ஆசை ப்ரோமோ...
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, விஜயாவின் மாற்றத்தை உணர்ந்து கண்கலங்கும் ப்ரொமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தும் வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் புதிய திருப்பம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முத்து தனது மாற்றத்தை வெளிப்படுத்தும் ப்ரொமோ தற்போது ரசிகர்களிடையே தீவிர கவனத்தை பெற்றுள்ளது.
விஜயாவின் மனமாற்றம்
சமீபத்தில் ரோகினி மற்றும் முத்து காவல் நிலையத்திற்கு சென்று வந்த பிறகு, விஜயாவின் நடத்தை முற்றிலும் மாறியுள்ளது. சமூக சேவை செய்வதற்கும் டாக்டர் பட்டம் பெறுவதற்கும் விஜயா கடுமையாக முயற்சிக்கிறார். அன்னதானம் நடத்துதல், மீனாவுக்கு பாசத்துடன் நடந்து கொள்வது உள்ளிட்ட செயல்கள் இதற்கு உதாரணமாக அமைகின்றன.
தாலி பிரிப்பு விழாவில் அசத்தல்
இன்றைய கதையில், சீதாவின் தாலி பிரிக்கும் விழாவில் முக்கிய சடங்குகளை விஜயா தானாகவே மேற்கொள்கிறார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் விஜயாவின் இந்த திடீர் மாற்றத்தை புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: விஜயாவிடம் நல்ல பேர் வாங்க ரோகினி செய்த செயல்! சிக்கலால் மனோஜிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை! சிறக்கடிக்க ஆசை ப்ரோமோ வீடியோ...
முத்துவின் உணர்ச்சி ப்ரொமோ
இந்த நிலையில், விஜயா நடத்தும் அன்னதானத்தில் பங்கேற்கும் முத்து பந்தியில் அமர்ந்து உணவு எடுத்துக்கொள்கிறார். உணவு சாப்பிடும் தருணத்தில் அவருடைய கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகுகிறது. இந்த உணர்வுபூர்வமான தருணத்தை முத்து, வீட்டில் வந்து அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இந்த சமீபத்திய ப்ரொமோ, விஜயாவின் மாற்றத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதோடு, ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. சீரியலில் அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: விஜயாவிடம் வசமாக சிக்கிய ரோகிணி! முத்துவை கைது செய்ய வந்த போலிசார்! மீண்டும் எழுந்த வருவாரா ரோகிணி! சிறக்கடிக்க ஆசை ப்ரோமோ..