அட இவ்வுகலாமா! அப்போ வேற லெவல் தான்! பிக் பாஸ் சீசன் 9ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் யார்னு தெரியுமா?
பிரபல ரிவியில் விரைவில் தொடங்கும் பிக் பாஸ் சீசன் 9 குறித்து ரசிகர்களிடையே பரபரப்பு அதிகரித்துள்ளது. போட்டியாளர்கள் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் டெலிவிஷன் உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி, ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகியுள்ளது. ஒவ்வொரு சீசனும் தனித்துவமான திருப்பங்களுடன் பார்வையாளர்களை ஈர்த்துள்ள இந்த நிகழ்ச்சி, இம்முறை கூட பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் வரலாறு
பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ், 2017ம் ஆண்டிலிருந்து தொடங்கி தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முதல் சீசனிலிருந்து ஏழாவது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஆனால் கடந்த ஆண்டு தனிப்பட்ட காரணங்களால் அவர் விலகியதால், எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி நடத்தினார்.
பிக் பாஸ் சீசன் 9 அப்டேட்
இப்போது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் பிக் பாஸ் சீசன் 9, செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் புரொமோவுடன் வெளிவரும் என்று குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடி மாற்றம்! சீசன் 9 தொகுப்பாளர் யார் தெரியுமா? இந்தமுறை இவர்களுக்கும் வாய்ப்பு உள்ளதா!
போட்டியாளர்கள் விவரம்
சமீபத்தில் வெளியான தகவலின்படி, 9வது சீசனில் கலந்துகொள்ளும் சில போட்டியாளர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர் சின்னத்திரை பிரபலங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் புதிய திருப்பங்களும், சுவாரஸ்ய தருணங்களும் ரசிகர்களை காத்திருக்கின்றன.
இம்முறை பிக் பாஸ் சீசன் 9, ரசிகர்களுக்கு மேலும் அதிக அதிர்வுகளை தரும் என நிச்சயம் கூறலாம். வரவிருக்கும் புரொமோவும், போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கப் போகின்றன.
இதையும் படிங்க: அப்படியே வடிவேலு மாறியே இருக்கே! ரெடின் கிங்ஸ்லி மனைவியின் காமெடி வீடியோ! இணையத்தில் வைராலாகும் காணொளி...