×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எனக்கு 3 கோடி பாலோவர்ஸ் இருக்காங்க.! அதற்காக இதெல்லாம் நடக்குமா?? போட்டுடைத்த நடிகை பூஜா ஹெக்டே!!

எனக்கு 3 கோடி பாலோவர்ஸ் இருக்காங்க.! அதற்காக இதெல்லாம் நடக்குமா?? போட்டுடைத்த நடிகை பூஜா ஹெக்டே!!

Advertisement

தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால் அப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தேடி தரவில்லை. தொடர்ந்து பூஜா தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து பிரபலமாக வலம் வந்தார். பின் மீண்டும் அவர் தமிழில் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் என்ற படத்தில் நடித்திருந்தார்.

ரெட்ரோ ஹீரோயின் பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே தற்போது சூர்யாவுடன் 'ரெட்ரோ' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் அவர் விஜய்யின் ஜனநாயகன் படத்தில் ஹீரோயினாகவும், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார். பூஜா தற்போது ரெட்ரோ பட ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படிங்க: வாவ்.. செம கியூட் ஜோடி.! நடிகை ஜனனி ஐயருக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு.! மாப்பிள்ளை யாருனு பார்த்தீங்களா!!

சமூக ஊடகங்கள் குறித்த கருத்து

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் சமூக ஊடகங்கள் குறித்த கேள்விக்கு, எனக்கு இன்ஸ்டாகிராமில்  3 கோடி பாலோவர்ஸ் இருக்காங்க. அதற்காக எனது படத்திற்கு 3 கோடி டிக்கெட் விற்பனையாகும் என்ற  உத்தரவாதம் கிடையாது. அதேபோல, 50 லட்சம் பாலோவர்ஸைக் கொண்ட பல சூப்பர் ஸ்டார்கள் உள்ளனர். அவர்களது படங்களுக்கு அதிகளவில் கூட்டம் கூடும். சமூக ஊடகங்கள் உண்மையான உலகம் கிடையாது. அதனை நாம் உணர வேண்டும்' என கூறியுள்ளார்.


,

இதையும் படிங்க: ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்.! தக்க விளக்கமளித்த குட் பேட் அக்லி படக்குழு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pooja hegde #Social media #Retro Movie
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story