×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2 மணிக்கு லாஸ்லியாவுடன் என்ன வேலை- கவினை மொத்தமாக தாக்கிய சக போட்டியாளர்கள்!

big boss latest promo

Advertisement

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் சர்ச்சைகளுக்கும், காதல் காட்சிகளும்  பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனை போலவே இந்த சீசனிலும் அதற்கு எந்த பஞ்சமும் இல்லை.

இந்நிலையில் பிக்பாஸ் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் சரவணன் மீனாட்சி தொடரில் மூலம் பிரபலமான நடிகர் கவின். இவர் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். காதல் மன்னனாக பிக்பாஸ் வீட்டிற்குள் வலம்வரும் கவின் மீது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இரண்டாவது நாளிலேயே அபிராமிக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் கவின் அவரை காதலை ஏற்றுக்கொள்ளாமல் நண்பர்களாக இருக்கலாம் என எஸ்கேப் ஆனார். அதனை தொடர்ந்து கவின் சாக்ஷி, லாஸ்லியா என அவரது காதல் பாதைகள் மாறிக்கொண்டே போனது.

பின்னர் இதுவே கவினுக்கு பெரும் பிரச்சினையை கிளப்பிய நிலையில், அவர்  கண்ணீர் விட்டு கதறும் அளவிற்கு சென்றார். பின்னர் ஒருவழியாக அனைவரும் சமாதானமாகிய மீண்டும் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்து விட்டது.

இன்று வெளியான புதிய ப்ரோமோவில் கவினிடம், சாக்ஷிக்கு ஆதரவாக சக போட்டியாளர்கள் பேசியுள்ளனர்.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#big boss #kavin #lasliya
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story