×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நாளை சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்தாள் வன்முறைகள் வெடிக்கும்; முக்கிய பிரமுகரின் பரபரப்பு பேச்சு..!

sabarimalai ayyappan kovil karala

Advertisement

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் இதுவரை அனுமதிக்கப்படாத சூழ்நிலை நிலவி வந்தது.  இந்த நிலையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் இக்கோவிலுக்குள் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை ஒரு தரப்பினர் வரவேற்று கருத்துகள் தெரிவித்திருந்தாலும், ஒரு தரப்பினர் கடுமையான எதிர்ப்புகளை நாள்தோறும் தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நாளை ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. 5 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஐயப்பன் கோயிலுக்குள் வரும் நவம்பர் 17-ஆம் தேதி முதல் அனுமதிக்க தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்துத்துவ அமைப்புகள் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஆளும் பாஜக கட்சியினர் தலைமையில் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் என்ன ஒரு சிறப்பு என்றாள் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக இந்த போராட்டத்தில் பெரும்பான்மையான பெண்களே ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பெண்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப் பட வேண்டிய காலத்தை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரியப்படுத்தவில்லை. இதனால் நாளை திறக்கப்படும் கோவிலுக்குள் பெண்களும் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தலைமை தந்திரி மகேஷ்வரரு கூறுகையில் கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுவரையான பெண்களை அனுமதித்தால் வன்முறை வெடிக்கும். சபரிமலை மீது நம்பிக்கை இருப்பவர்கள், பழமையான நமது கலாச்சாரத்திற்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்றார்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil Spark #sabarimalai #KERALA
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story