×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு என்ன?

history of ayudha pooja

Advertisement

ஆயுத பூஜை என்றால் ஒரு நாள் விடுமுறை தொழிலகங்களில் இனிப்பு என அனைவரின் மனதிலும் இப்படித்தான் நினைவிற்கு வரும். ஆனால் இந்த ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது அதன் வரலாறு என்ன என்று பலருக்கு தெரிவதில்லை. ஆயுத பூஜை பற்றி இருவேறு வரலாறுகள் கூறப்படுகின்றன.

கலிங்கப்போர் நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், அந்த போரின் தாக்கத்தால் தான் மாமன்னர் அசோக சக்கரவர்த்தி இனி ஒருபோதும் ஆயுதங்களை பயன்படுத்தி உயிர்களை கொல்ல மாட்டேன். மற்றவர்களையும்  அவ்வாறு செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று புத்த பிச்சுக்கு சத்தியம் செய்தார்.

அன்று இரத்தக்கறை பதிந்த ஆயுதங்களை கழுவி தூய்மை செய்து இனி ஒரு உயிர்களையும் கொல்லமாட்டேன் என்று சத்தியம் செய்ததின் நினைவாக ஒவ்வொரு வருடமும் ஆயுதங்களை தூய்மைபடுத்தி பூஜை செய்து சத்தியம் செய்வார். அனைவரையும் அவ்வாறு செய்ய சொன்னார். அந்த நாளே ஆயுதபூஜை தினமாக கொண்டாடப்பட்டது. அசோக மன்னன் ஆயுதம் களைதல் என்னும் பெயரால் வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வந்தது என்பது ஒரு வரலாறு.

மேலும் சிலர் பின்னரும் வரலாறு தான் காரணம் என்று கூறுகின்றனர். பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்றது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நாடு இழந்து, பெருமை இழந்து, வனவாசம் மேற்கொண்ட பாண்டவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தடியில் மறைத்து வைத்திருந்தனர்.

பின்னர் 14 வருட வனவாசத்திற்கு பிறகு நாடு திரும்பிய பாண்டவர்கள், அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தாங்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை எனப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#history of ayudha pooja
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story