தொடரும் கற்பழிப்பு: மேற்கு வங்கத்தில் இரும்பு கம்பியை வைத்து பெண்ணுக்கு நடந்த கொடூரம்!
girl raped and attacked by relative in bengal

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பெண் ஒருவர் தன் உறவினர் பலாத்காரம் செய்யப்பட்டு இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கற்பழிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உறவினர் ஒருவர் தன் உறவுக்கார பெண்ணை தனிமையில் சந்திக்க அழைத்துள்ளார். அவர் சொத்து சம்பந்தமாக பேசவேண்டுமென்று தன் வீட்டிற்கு அருகிலுள்ள குளத்தின் அருகே அந்த பெண்ணை வரச் சொல்லியுள்ளார். அதனை தொடர்ந்து அங்கு சென்ற அந்த பெண்ணை தன் கூட்டாளியுடன் சேர்ந்து அந்த உறவுக்காரர் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். அதோடு மட்டும் விட்டுவிடாமல் அந்த பெண்ணை இரும்பு கம்பியை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்த மிருகத்தனமான தாக்குதலில் காயப்பட்டு துடிதுடித்த அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் அந்த வழியாக வந்த ஒரு ரிக்க்ஷா ஓட்டுநர் அந்த பெண் வலியால் துடிப்பதை பார்த்துள்ளார். உடனே அந்தப் பெண்ணை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் அந்த டிரைவர். இந்த சம்பவம் நடந்த பொழுது அந்தப் பெண்ணின் கணவர் அங்கு இல்லை.
ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு மூளையில் இதைப் போன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஒரு சில சம்பவங்கள் மட்டுமே வெளிச்சத்திற்கு வருகின்றது. இதற்கு காரணம் மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாதது தான். அரசு இதனைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.