தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாம்பத்தியத்தில் கருத்தரிப்பை தடுக்கும் விஷயங்கள்.. ஒத்த காண்டத்தில் இத்தனை விஷயம் உள்ளதா?..!

தாம்பத்தியத்தில் கருத்தரிப்பை தடுக்கும் விஷயங்கள்.. ஒத்த காண்டத்தில் இத்தனை விஷயம் உள்ளதா?..!

How to Avoid Pregnancy Intercourse with Partner Condom Usage Advantages Advertisement

தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடும் பலரும், தங்களுக்கென குழந்தைகளை பெற்றுக்கொண்ட பின்னரோ அல்லது குழந்தைகள் பிறப்பை தள்ளிப்போட விரும்புபவர்களோ பொதுவெளிகளில் கேட்க தயங்கும் விஷயமாக கருத்தரிக்காமல் இருப்பது எப்படி? என்ற கேள்வி இருக்கிறது. 

இதுகுறித்த விழிப்புணர்வுகள் இல்லாத காரணத்தால் கருக்கலைப்புகள் அதிகளவில் நடக்கிறது. கருப்பை என்பது உண்மையில் குப்பைக்கூடை கிடையாது. அடிக்கடி அதனுள் விந்தணுவை கொட்டி பின்னர் கருக்கலைப்பு செய்வதற்கு. அது மிகவும் மென்மையானது, புனிதமானது. 

condom

கருக்கலைப்பை தவிர்க்க உள்ள வழிமுறைகள் : 

தாம்பத்திய புணர்ச்சியின் போது ஆணின் உச்சகட்ட நிலையின் போது விந்தணு வெளியேற்றுவது அவருக்கு தெரியும். விந்தணு வெளியே வராகிப்போகிறது என்று தெரிந்தால் ஆணுறுப்பை பெண்ணுறுப்பில் இருந்து வெளியே எடுத்துக்கொள்ளுதல். இது பெரும்பாலும் சாத்தியம் இல்லாத விஷயம் என்றாலும், முயற்சித்து பார்க்கலாம். 

மனைவியின் மாதவிடாய் நாட்கள் முடிந்த நாட்களில் அல்லது மாதவிடாய் சுழற்சி ஆரம்பிக்கும் நாட்களுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் தாம்பத்தியம் மேற்கொள்ளலாம். இந்த நாட்களில் பெண்ணின் கருப்பையில் இருந்து வெளியேறும் கருமுட்டை தனது வாழ்நாட்களை முடித்துக்கொள்ளுதல் அல்லது புதிதாக உருவாகுதல் போன்ற நிலையில் இருப்பதால் கருத்தரிப்புக்கான வாய்ப்புகள் குறைவு. 

இன்றுள்ள காலங்களில் பலரும் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தொடங்கிவிட்டார்கள். ஆனால், இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். அதிக இரத்தப்போக்கு மற்றும் உடல் எடை கூடுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரலாம். 

பெண்களுக்கான காண்டமும் இன்றளவில் சந்தைகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. அந்தந்த வகை காண்டத்திற்கேற்ப செயல்முறை மாறுபடும். ஆனால், இதனால் தாம்பத்தியம் மேற்கொள்ளும் இரண்டு தம்பதிகளுக்கும் அசௌகரியம் ஏற்படலாம். 

ஆண்களுக்கான காண்டம் என்பது வழக்கமாக சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருளாகும். இதனை உபயோகிப்பது எளிது. பக்க விளைவுகள் பெரும்பாலும் இல்லை என்றாலும், காண்டத்தை உபயோகித்தவாறு பெண்ணுறுப்பு புணர்ச்சி மட்டும் மேற்கொள்ளுதல் நல்லது. தரமான கண்டமாக உபயோகிப்பது சாலச்சிறந்தது. 

ஆண்கள் உபயோகம் செய்யும் காண்டத்தில் பலவகை உள்ளன.இவற்றில் Doted, Stripped, Ribbed, Flavored, Thin Condom போன்று பல்வேறு வகைகள் சந்தைகளில் உள்ளது. இவை விந்து முந்துதலை தடுத்து, துணையை விரைந்து உச்சக்கட்டத்திற்கு அழைத்து செல்லும் என்றாலும், துணையின் விருப்பத்திற்கேற்ப காண்டத்தை தேர்வு செய்வது அல்லது கண்டத்தையே தவிர்ப்பது நல்லது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#condom #Intercourse #18 plus #18 Plus Tips #Ladies Corner
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story