×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிகாலையில் ஏன் உடலுறவில் ஈடுபட வேண்டும் தெரியுமா? இது தெரிஞ்சா இனி நீங்க தினமும் காலையில்தான் அத செய்விங்க!

Health benefits of morning time relationship

Advertisement

பொதுவாக உடலுறவு என்றால் அது இரவில், அதுவும் இருட்டறையில்தான் நடக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர். ஆனால் கணவன் மனைவி அதிகாலை உறவில் ஈடுபடும் போது மனதளவிலும், உடலளவிலும் பல நன்மைகள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பெரும்பாலும் தம்பதிகள் காலை உறவை விரும்புவதில்லை அதற்கு பல காரணங்கள் உண்டு. அப்படியே சிலபேர் உறவில் ஈடுபட்டாலும் ஏனோதானோன்னுதான் செயல்படுகின்றனர்.


இதில் சில ஆண்கள் அதிகாலையில் உறவு கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், காலையில் வேகமாக எழுந்து வீட்டு வேலை, சமையல் வேலை செய்து, குழந்தைகளை பள்ளிக்கும், கணவரை அலுவலகத்திற்கும் அனுப்புவதை யோசித்துக்கொண்டிருக்கும் பெண்களில் சிலர், கணவர் முயற்சிக்கும் போது, இரவு பார்த்துக்கொள்ளாலாம் என கூறிவிட்டு தவிர்க்க முயற்ச்சிப்பார்கள். ஆனால், அதிகாலை நேரத்தில் உடலுறவு கொள்வதால் ஏற்படும் நன்மைகளை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதிகாலையில் உறவு கொள்ளும் போது நமது உடலில் ஆக்ஸிடோசின் எனப்படும் நல்ல ரசாயனம் ஒன்று வெளிப்படும். இது நம்மை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க பெரிதும் உதவுகிறதாம். அதேபோல், தொடர்ந்து அதிகாலை நேரங்களில் உறவில் ஈடுபடுபர்களுக்கு மன அமைதியும், உடல் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறதாம்.

மேலும் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவது தடுக்கப்படுவதாகவும், சளி, காய்ச்சல் உள்ளிட நோய்கள் குணமடைகின்றன எனவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதோடு, கூந்தல், சருமம், நகம் ஆகியவை நன்றாக வளர்ச்சி அடையவும் அது உதவுகிறதாம்.

மேலும், இரவில் நன்றாக உறங்குபவர்களுக்கு காலையில் உடலும், மனமும் புத்துணர்ச்சியோடு இருக்கும். அப்போது உடலில் உள்ள வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படும். உடலும் நல்ல வலுவுடன் இருக்கும். எனவே, காலை நேரங்களில் உடலுறவில் ஈடுபடும் போது நன்றாக செயல்படவும் முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆனால், அதே நேரத்தில் தங்கள் துணையை வற்புறுத்தாமல், இதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். மென்மையான அணுகுமுறையே உறவில் இன்பத்தை கொடுக்கும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Morning time relationship #Health benefits
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story