’மியூஸிக்கலி’ என்கிற ’டிக்டாக்’மூலம் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
’மியூஸிக்கலி’ என்கிற ’டிக்டாக்’மூலம் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

கடந்த 12ம் தேதி வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே இருந்த தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர், உடல் சிதைவுற்ற நிலையில் இறந்து கிடந்தார். அந்த உடலை கைப்பற்றிய போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவரின் பெயர் கலையரசன் (24) என்பதும், அவர் வியாசர்பாடி கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
அவரது இறப்பு குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. ஆனால் கலையரசனின் கைப்பேசி மட்டும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் பெரம்பூர் ரயில்வே காவல்நிலையத்தி புகார் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரின் புகாரை அடுத்து விசாரணை நடைபெற்ற நிலையில், இறந்த வாலிபர் கலையரசன், ’மியூஸிக்கலி’ என்கிற ’டிக்டாக்’ செயலியில் பல வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனார். அதில் பெரும்பாலான வீடியோக்களில் பெண் போல பாவனை செய்து நடித்தும், பெண்கள் பாடியை பாடல்களை பாடுவது போல நடித்தும் அவர் பதிவிட்டுள்ளார்.
கலையரசனின் இந்த வீடியோவுக்கு பலரும் எதிர்மறையாகவும், கிண்டல் செய்யும் விதமாகவும் கமெண்டுகளை பதிவிட்டிருந்தனர். மேலும், தரம் தாழ்ந்த வார்த்தைகளால் அவரை பலரும் விமர்சித்திருந்தனர். இதுகுறித்து வருந்திய கலையரசன் ”தகாத வார்த்தைகள் வேண்டாம்” என்று குறிப்பிட்டு ஒரு வீடியோவையும் டிக்டாக்கில் வெளியிட்டிருந்தது தெரியவந்தது.
எனினும் இளைஞர் கலையரசனின் மரணம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. கலையரசனின் வீடியோவுக்கு எதிர்மறையான கருத்துக்களை பதிந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் பலர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.