இந்தியா சமூகம்

மனைவியின் இந்த செயலால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்; வெளியான அதிர்ச்சி தகவல்.!

Summary:

husbent and wife fight and suside

கர்வா சவுத் பண்டிகையின்போது தனது மனைவி விரதம் இருக்க மறுத்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்று கர்வா சவுத். இந்த விழாக்காலங்களில் மனைவிமார்கள் தங்களது கணவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டி விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.

உத்திரப் பிரதேசம் மாநிலம் மதுரா அருகே மாகேரா என்ற பகுதியில் தினேஷ் ஜாதவும் அவருடைய மனைவியும் வசித்துவருகிறார்கள். இந்நிலையில் விழாவின்போது தன்னுடைய மனைவியை விரதம் இருக்குமாறு தினேஷ் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவருடைய மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related image

இதனால் மனமுடைந்த தினேஷ் ஜாதவ் வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தார்கள் அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள். அதன்பிறகு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 


Advertisement