தாயுடன் சண்டை போட்ட கீழ்வீட்டு ஆண்ட்டி; 17 வயது சிறுவனின் வெறிச்செயல்

தாயுடன் சண்டை போட்ட கீழ்வீட்டு ஆண்ட்டி; 17 வயது சிறுவனின் வெறிச்செயல்


boy-killed-neighbour-aunty-for-his-mom

சென்னை ஓட்டேரியில் வாடகைக்கு வீடெடுத்து வசித்து வருகிறார் பரிமளா. இவரது கணவர் கோவிந்தராஜன். இவர்களுக்கு 11 வயதில் கார்த்திக் என்ற மகன் உள்ளான். கணவர் இறந்த நிலையில் பரிமளா தனது மகனை மயிலாப்பூரில் உள்ள விடுதியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.

பரிமளா வசித்து வந்த வீட்டின் மேல் தளத்தில் பாக்கியம் என்பவரும் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு சூர்யா என்ற 17 வயது மகன் உள்ளார். 

17 year son

இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பரிமளாவுக்கும் பாக்கியத்திற்கும் மீண்டும் தகராறு வந்தது. இதனால் பாக்கியத்தை பரிமளா கடுமையாக திட்டியுள்ளார்.

இதனை கண்டு ஆத்திரமடைந்த பாக்கியத்தின் மகன் சூர்யா, பரிமளாவை 15 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் அலறி துடித்த பரிமளா நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். 

17 year son

சத்தம் கேட்டு கூடிய அக்கம்பக்கத்தினர் பரிமளாவை சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிமளா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தலைமை செயலகம் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியவர்களுக்குள் நடைபெற்ற சண்டையில் 17 வயது சிறுவன் கையில் கத்தியெடுத்து கொலை வரை சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.