#Breaking: அமரன் படத்தை பார்த்து கண்கலங்கி அழுத ரஜினிகாந்த்; காரணம் என்ன?.. அவரே சொன்ன தகவல்.!
இருமனமும் இணைந்து உறவுக்கொள்வதால் இத்தனை நண்மைகளா! கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்
உடலுறவு கொள்வதை வெறும் இச்சைக்காக செய்வதாக மட்டுமே பலர் கருதுகிறோம். உண்மையில் அது நமக்கு உடலளவிலும் மனதளவிலும் பல்வேறு நண்மைகளை தரக்கூடிய ஓர் உன்னதமான உறவு.
நம் உடலில் உள்ள ரசாயனங்கள், ஹார்மோன்கள், உள்ளுறுப்புகள், மனம் என எல்லா விசயங்களும் சம்பந்தப்படும் இந்த உடலுறவானது மிகப்பெரிய நிவாரணி என்பதை அனைவரும் கட்டாயம் தெரிந்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. இதன் உன்னதத்தை முழுவதுமாக தெரிந்துகொண்ட யாரும் ஒருவர் சம்மதம் இல்லாமல் வலுகட்டாயமாக உறவுக்கொள்ள வேண்டும் என எண்ணமாட்டார்கள்.
உடலுறவானது இனப்பெருக்கத்துக்காக மட்டுமல்லாமல், நம் ஆரோக்கியத்திற்கும் நலமான வாழ்க்கைக்கும் மிகப்பெரிய பங்காற்றுகிறது. நல்ல தாம்பத்ய உறவில் ஈடுபாடு கொண்டவர்கள் வாழ்வின் எல்லா செல்வங்களையும் பெற்றவர்களைப் போல மகிழ்ச்சியாய் இருப்பார்கள். ஏன் தெரியுமா?
உடலின் தசைகளும், மனதின் எண்ணங்களும் ஒரு நல்ல உடலுறவால் அமைதிப்படுத்துகிறது. நிறைவையும், இளைப்பாறுதலையும் உண்டாக்குகிறது. வெறும் கடமைக்காக, சுயநலத்திற்காக அல்லாமல், காதலில் கசிந்துருகி இணைபவர்கள் முழு ஈடுபாட்டுடன் உடலுறவு கொள்ளும் போது, ஒரு முழுமையான தியானத்தின் பயனை அடைகிறார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
இப்படிப்பட்ட உடலுறவால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொண்டால், அதில் நாம் அலட்சியமாக இருக்க மாட்டோம்.
இதய ஆரோக்கியம்:
நம் இதயங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமென்றால், அதற்கு உடலுறவு மிகவும் அவசியம். கார்டியோ உடற்பயிற்சியினால் இதயம் பெரும் நன்மைகளை, உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம் பெறமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஒரு நிமிடத்தில் சுமார் 60 முதல் 100 முறை இதயம் துடிக்கிறது. உடலுறவின் போது இதயத் துடிப்பின் அளவு நிமிடத்திற்கு, 120-ஆக எகிறும். ஒரு மையில் தூர நடைப் பயிற்சியின் பலனை, சில நிமிட இன்பம் தரும். தவிர, இணையர்களின் உணர்வும், மகிழ்வும் இதயத்தை இன்னும் வலுப்படுத்தும்.
ஆழ்ந்த உறக்கம்:
மனதிற்கு நிறைவான உடலுறவு ஆழ்ந்த உறக்கத்திற்கு வழி வகுக்கும். முன் விளையாட்டுகளில் ஈடுபடும்போது, உடலிலிருந்து அதிகளவு ஆக்சிடோஸின் மற்றும் குறைந்த அளவிற்கு கார்டிசோல் ஹார்மோனும் வெளியாகின்றன.
ஆக்ஸிடோசின் என்பது இணையருடன் நெருக்கத்தை உணர வைக்கும் ஹார்மோன். கார்டிசோல் என்பது மன அழுத்தம் தொடர்பான ஹார்மோன். இந்த ஹார்மோன்கள் வெளியாவதால் உடல் மேலும் இலகுவாகி, அமைதியாக உணர வைக்கும். அதனால் ஆழ்ந்த நித்திரை நிச்சயம் கிடைக்கும்.
மூளை சுறுசுறுப்பாகும்:
சீரான இடைவெளியில் தொடர்ந்து உறவு வைத்துக் கொள்பவர்களின் மூளை எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும்.
புதுமையான உணர்வு, வசீகர புன்னகை, மன அழுத்தம் இல்லாத நிலையில் இருப்பதால், அவர்களின் மூளைச் செல்களில் வித்தியாசம் தெரிவதாகவும், நுண்ணறிவுத் திறன் மேம்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்
எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்:
வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை உடலுறவு வைத்துக் கொள்பவர்களுக்கு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. அதாவது இம்யூனோகுளோபின் எனப்படும் நோய் எதிர்ப்புப் புரதத்தின் அளவு உடலில் அதிகமாகி வைரஸ், பாக்டீரியா மற்றும் கிருமிகள் போன்றவற்றால் உடலில் ஏற்படும் நோய் தாக்குதல் குறைகிறது.
மன அழுத்தத்தை குறைக்கும்:
நாள் முழுவதும் மன அழுத்தத்துடன் பணிகளைச் செய்பவர்கள், இரவு உடலுறவு வைத்துக் கொள்வதால், அன்றைய நாளுக்கான மன அழுத்தம் நீங்கி உடலும், மனமும் லேசாகும்.
குறிப்பாக, உடலுறவின் உச்ச இன்பத்தை தொடும்போது, உடலுக்குள் என்டோர்பின் போன்ற பாசிட்டிவ் எண்ணங்களை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் பெருக்கெடுக்கும். பதட்டம், எதிர்மறை எண்ணங்கள் போன்றவற்றிலிருந்து எளிதில் விடுபட, இந்த ஹார்மோன்கள் உதவுகின்றன.
என்றும் இளமை:
ஆரோக்கியமான உடலுறவு ஒருவரை என்றென்றும் இளமையாக வைத்திருக்கும். ஏனென்றால், உடலுறவின் போது சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் மேனியை சுருக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.
வலி நிவாரணி
‘கடும் தலைவலி, இன்றிரவு எதுவும் வேண்டாமே’ என உடல் உபாதைகளால் உடலுறவை தள்ளிப்போடுவது வழக்கம். ஆனால் அந்த சமயத்தில் உடலுறவு கொள்வதால் மூளையில் எண்டார்பின் எனும் ஹார்மோன் சுரக்க தொடங்கிவிடுமாம். அதுவே தலைவலிக்கோ, உடல் வலிக்கோ சிறந்த நிவாரணியாகச் செயல்படும் என்று ஒரு ஆராய்ச்சியின் முடிவில் தெரிவிக்கின்றனர்.
ஆக, உடலில் ஏதும் வலிகள் இருந்தால், அதற்கு மருந்தாக, உடலுறவே போதுமானது. மாத்திரைகள் தேவையில்லை.
உடல் பொலிவு:
உடலுக்கு சிறந்த உடற்பயிற்சியாக உடலுறவு கருதப்படுகிறது.
பலவிதமான நிலைகளை முயற்சி செய்பவர்களுக்கு, உடற்பயிற்சியினால் உடல் பெறும் கட்டமைப்பை, உடலுறவினால் பெறமுடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். தவிர, மேனியும் பொலிவுபெறும். அதாவது, சருமத்துக்கு தூய்மையான ஆக்ஸிஜன் கிடைக்கும். நச்சுக்கள் வெளியேறி, மேனி பொலிவாக மாறும். உதட்டில் தொடங்கி உடலின் வடிவம், நிறம் என அனைத்தும் புதுப்பிக்கப்படும்.