லைப் ஸ்டைல் 18 Plus

பண்டைய கால அரசர்களை அந்த காலத்து ராணிகள் இப்படித்தான் மயக்கினார்களாம்..! வெளியாகும் சுவாரசிய தகவல்கள்..!

Summary:

How queens impressed king

மன்னர் காலத்தில் பெண்களை ஒரு கவர்ச்சி பொருளாகத்தான் பயன்படுத்தியுள்ளனர். மன்னர்கள் அந்தப்புரம் வைத்திருப்பதற்கு காரணமே பல பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கத்தான். தங்களுக்கு பிடித்த பெண்கள், தாங்கள் சண்டையிட்டு வெற்றிபெற்ற நாட்டின் ராணியை சிறைபிடித்து அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

இன்றைய தலைமுறையில் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பார்கள். ஆனால் அந்த காலத்தில் ராணிகள் வயதானாலும் எப்படி மன்னர்களை மயக்கினார்கள் என்று பாக்கலாம் வாங்க.

குளியல்
பொதுவாக அரண்மை அல்லது அந்தப்புரம் என்றாலே ராணிகள் ரோஜாப்பூ நிரப்பிய தொட்டிகளில் இறங்கி குளிப்பதை நாம் பல்வேறு படங்களில் பார்த்திருப்போம். அதற்கு காரணம் ரோஜாப்பூ நிரப்பிய தண்ணீர் ராணிகளின் அழகை மேம்படுவதற்கும், அவர்கள் மேனி பொலிவு பெறுவதற்கும் பயன்படுத்தியுள்ளனர்.

கழுதை பால்
கழுதை பால், ஆலிவ் ஆயில் மற்றும் தேன் கலந்து குளியலுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இதில் இருக்கும் ஆன்டி-ஏஜிங் தன்மை அவர்களது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியிருக்கிறது.


கலை
இன்று பல பெண்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலவிதமான உடற் பயிற்சிகளை செய்கின்றனர். ஆனால் அந்த காலத்து பெண்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக அதற்கு ஈடான நடன பயிற்சிகளை மேற்கொண்டு தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தனர்.

நகை, உடை
ராணி என்றாலே நம் எண்ணத்தில் வருவது நகை, உடைதான். தாங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரிவதற்காக பலவிதமான வேலைப்பாடுகளை கொண்ட அணிகலன்களையும், உடைகளையும் அனிந்துள்ளனர்.

வாசனை திரவியம்
கலைநயம் மிக்க நகைகள், உடைகள் உடுத்துவதை தாண்டி, அரசர்களை மயக்க வாசனை திரவியம் பயன்படுத்தவும் செய்துள்ளனர். ஒவ்வொரு ராணியும் தங்களுக்கான தனி வாசனை திரவியம் தயாரித்து தரவும் தனி நபர்களை பணியமர்த்தி இருக்கிறார்கள்.


Advertisement