ஆசிய கண்டத்தில் வெளுத்து வாங்கும் வெயில்; வெளியான அதிர்ச்சி தகவல்..!



asia-containment-heatwave-on-2024

 

இந்தியாவில் கோடைகாலம் தொடங்கியதில் இருந்து கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் சராசரியாக 44 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவை வெப்பநிலை கடந்து இருக்கிறது. கோடையிலும் குளுகுளு தன்மையை கொண்ட நீலகிரியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

இதனால் மனிதர்கள் முதல் வனவிலங்குகள் வரை கடுமையாக அவதிப்பட தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக வெயியின் தொடக்கத்தில் மனிதர்களுக்கு வெப்பத்தால் ஏற்படும் அம்மை, நீர் இழப்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டன. தற்போது அவை விலங்குகளுக்கும் ஏற்பட தொடங்கியுள்ளன. வனங்களை ஒட்டியுள்ள ஊர்களில் வனவிலங்குகள் அதிகம் நுழைகின்றன. 

Asia

இந்நிலையில், ஒட்டுமொத்த ஆசியாவிலும் வெப்பநிலை என்பது கடுமையாக தற்போது அதிகரித்துள்ளது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான வெளியான அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஆசிய நாடுகளில் அதிக வெப்பம் 40 டிகிரியை கடந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. சராசரியாக பதிவு செய்யப்பட்டுள்ள வெப்பநிலை குறித்த விபரங்கள் பின்வருமாறு., 

1) மியான்மர் 45 டிகிரி செல்ஸியஸ்
2) தாய்லாந்து 44.6 டிகிரி செல்ஸியஸ்
3) இந்தியா 44.5 டிகிரி செல்ஸியஸ்
4) வங்கதேசம் 42.8 டிகிரி செல்ஸியஸ்
5) லாவோஸ் 42.4 டிகிரி செல்ஸியஸ்
6) வியட்நாம் 42.4 டிகிரி செல்ஸியஸ்
7) நேபாளம் 42.2 டிகிரி செல்ஸியஸ்
8) சீனா 41.9 டிகிரி செல்ஸியஸ்
9) பிலிப்பைன்ஸ் 37 டிகிரி செல்ஸியஸ்
10) சிங்கப்பூர் 36.7 டிகிரி செல்ஸியஸ்
11) இந்தோனேஷியா 33 டிகிரி செல்ஸியஸ்