என்ன மேடம் இப்படி பண்ணிடீங்க?... தமிழுக்கு டாட்டா காட்டி, தெலுங்கு பிக்பாஸில் களமிறங்கிய ஷகிலா.!



telugu-biggboss-shakila-entry

 

தமிழ் திரையுலகில் கவர்ச்சியான நடிகையாக வலம்வந்தவர் ஷகிலா. இவர் இன்றளவில் பல யூடியூப் சேனலுக்கு தனது நிஜவாழ்க்கை தொடர்பான பேட்டி கொடுத்து, தனது தரப்பு செயல்களை செவ்வனே செய்து வருகிறார். 

திருமணமாகாத நடிகை சகிலா, திருநங்கையை மகளாக தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அம்மாவும் - மகளுமான யூடியூப் சேனல் நடத்தி வருகின்றனர். தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் கலந்துகொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், தமிழில் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்த ஆண்டில் சகிலா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் தெலுங்கு பிக்பாஸில் இடம்பெற்றுள்ளார். 

நேற்று போட்டியாளர்கள் அங்கு பிக்பாஸ் இல்லத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தொகுப்பாளர் நாகர்ஜுனா ஷகிலாவை தெலுங்கு பிக்பாஸ் இல்லத்திற்குள் அனுப்பி வைத்தார்.